தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 3,665 காலிப்பணியிடங்கள் கொண்ட இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 03.09.2025 முதல் துவங்கப்பட்டு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது.