தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு பேசுகையில்,தமிழக அரசு செயல்படுத்தி வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், தாயுமானவர், நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக கூறி தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.