சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சின்ன கொட்டகுடி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி (38). இவர் கணவர் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், மூன்று மகள்களுடன் வசித்து வந்துவருகிறார். அவரது இரண்டாவது மகள் அம்மு, கன்னியாகுமரியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பொறியியல் (ECE) படித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வீட்டிற்கு வந்த அம்மு, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.