புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஹால்ஸ் (தனியார்) நிறுவனத்திலிருந்து அரசின் மதிப்பீட்டில் சுமார் ரூ38 லட்சம் மதிப்புள்ள 1050 பெட்டி மதுபானங்களை ஏற்றிக்கொண்டு, சிவகங்கை அருகே உள்ள அரசு மதுபான குடோனுக்கு வந்த லாரி, புதூர் அருகே புறவழிச் சாலையில் கவிழ்ந்தது. லாரி ஓட்டுநர் ஜெயபால் சிறு காயங்களுடன் தப்பினார். சிதறிய மதுபானங்கள் பின்னர் மாற்று வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன.