முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதம் ஒருமுறை அல்லது இருமுறை எண்ணப்படும். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இந்த நிலையில் இன்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது.