கடந்த 06.08.2025 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை அரிவாளை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி குலையன்கரிசல் பகுதி ஹரிசிங் கைது செய்யப்பட்டார். அதேபோன்று 11.08.2025 அன்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தங்ககுமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இரண்டு பேரும் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.