தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா தலைமையில் போலீசார், விவேகானந்தா நகர் தண்ணீர் தொட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் சோட்டையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த விஜய், மற்றும் மதன்குமார் என்பதும், இவர்கள் 15 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.