வேடசந்தூர் தாலுகா வடமதுரையில் உள்ள இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான முத்தாலம்மன் கோவில் மற்றும் வரப்பட்டி காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டு மேள வாத்தியங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் நீர் ஊற்றப்பட்டு பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.