புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மஞ்ச பேட்டை பகுதியிலிருந்து தஞ்சாவூருக்கு இன்று காலை தனது பைக்கில் பழனி மாணிக்கம் என்ற முதியவர் வந்து கொண்டிருந்தார். தமிழ் பல்கலைக்கழகம் அருகே டான்டெக்ஸ் ரவுண்டானா பகுதியில் பைக்கில் வந்த போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த முதியவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.