வேடசந்தூர் மனிதநேய மக்கள் கட்சியின் அலுவலகத்திற்கு மாநில தலைவரும் பாபநாசம் எம்எல்ஏவும் ஆன ஜவாஹிருல்லா நேற்று இரவு வருகை புரிந்தார். கட்சியினரிடையே ஆலோசனை நடத்திய அவர் பின்பு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார் அதில் அவர் கூறிய பொழுது:- நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் எந்த சூழ்நிலையிலும் கூட்டணியை விட்டு வெளியேற மாட்டோம், மத்திய அரசு தற்பொழுது அரசியல்வாதிகளுக்கு எதிராக கொண்டு வந்த சட்டம் உள்நோக்கம் கொண்டது என்றும், பீகாரில் உயிருடன் இருப்பவர்களை இறந்ததாக வாக்குகள் நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.