சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, ஓய்வறை, சமையலறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, இளையான்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.