தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப்பட்டி கிழக்கு காமராஜர் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் ராஜாமணி (33) மீனவர். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வசித்து வருகிறார். இதனால் அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.