தஞ்சாவூரில் இன்று மதியம் நடந்த நிகழ்ச்சியில் புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்ற மணப்பாறை முறுக்கிற்கு புதிய லோகோ வெளியிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற அறிவு சார் சொத்துரிமை வழக்கறிஞர் சஞ்சய் காந்தி இதனை வெளியிட மணப்பாறை முறுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் சேகர் பெற்றுக் கொண்டார்.