வேடசந்தூர் தாலுகா மாரம்பாடி அருகே எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக அந்தோணிசாமி என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிந்து செல்வகுமாரை வயது 34 என்பவரை கைது செய்தனர். இது குறித்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி கொலையாளி செல்வகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.