அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரத்திற்குட்பட்ட ஏலாக்குறிச்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் செப் - 13 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கண்,காது, மூக்கு, தொண்டை, பல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் இருதயவியல், தோல், எலும்பு, நரம்பியல் உள்ளிட்ட மருத்துவ சேவைகளும் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு.