சிவகங்கை மாவட்டம் இளையான்குடி யூனியனுக்கு உட்பட்ட பெரும்பச்சேரி, காந்திநகர் மற்றும் குமாரக்குறிச்சி ஆகிய மூன்று கிராமங்களுக்கும் பாத்தியப்பட்ட கன்மாயில் உள்ள மீன்களை, நீர்ப்பாசன சங்கத் தலைவர் நாகராஜ் குத்தகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், குத்தகைத் தொகையை உரிய முறையில் கிராமங்களுக்கு பிரித்து வழங்கவில்லை என்பதால், இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.