சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா சாக்கோட்டை யூனியன் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கம் (ஏஐடியூசி) சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பீட்டர் தலைமையேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.