அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு பேருந்து நீட்டிப்பு சேவை திங்கட்கிழமையன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூரிலிருந்து கீழப்பழுவூர், வி.கைகாட்டிக்கு செல்லும் பேருந்து சேவை விளாங்குடி வரை நீட்டிப்பு செய்யப்பட உள்ளதாகவும், அரியலூரில் இருந்து அயன் சுத்தமல்லி வரை செல்லும் பேருந்து சேவை கல்லக்குடி வரை நீட்டிப்பு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.