அரியலூர் மாவட்டம் கவரபாளையம் கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலின் திருவிழா கடந்த 03 ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடைப்பெற்றது. இதில் மேளதாளங்கள் முழங்க ஸ்ரீ மகா மாரியம்மன் தேரில் எழுத்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்த ஸ்ரீ மகா மாரியம்மனை கிராம பொதுமக்கள் தரிசனம்.