விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மாவட்ட எஸ்பி விஸ்வேஷ் பா சாஸ்திரி தலைமையில் ராஜூவ் நகரிலுள்ள தனியார் மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் மற்றும் விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.