வரும் 22ம் தேதி நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் 51வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக வெற்றி கழகத்தினரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தொழிலபதிபர் ஜே.கே.ஆர். முருகன் தலைமையில் தூத்துக்குடி பிரையண்ட் நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.