நாகை மாவட்டத்தில் 3 கோடியே 97 லட்சம்ரூபாய் மதிப்பில் 378 கிலோ மீட்டர் தொலைவில் வாய்க்கால்கள், 48 ஆறுகளில் தூர்வாரும் பணிகள்நிறைவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடைமடை பகுதியான நாகை மாவட்டத்திற்கு காவிரி நீர் இன்றுவந்து சேர்ந்தது. மாவட்டத்தின் கடைசி நீர் ஒழுங்கியான பாப்பாகோவில் அடுத்த நரியங்குடி ஓடம்போக்கியாறுவந்து சேர்ந்த காவிரி நீரை பொதுமக்களும், விவசாயிகளும் ஆரத்தி எடுத்தும், குலவையிட்டும் மலர் நெல்மணிகள் தூவி வரவேற்றனர்