வேடசந்தூர் பாரதி நகரில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து அப்பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். ஆத்து மேட்டில் இருந்து அகில இந்திய இந்து மகா சபா சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று அடைக்கனூர் பகுதியில் உள்ள குடகனாற்றில் கரைக்கப்பட்டது. குஜிலியம்பாறை தாலுகா பாளையத்தில் தொடங்கிய விநாயகர் சிலை ஊர்வலம் ஆர்.கோம்பை பங்களா மேட்டில் உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது.