தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள கேகே நகர் பகுதியில் சாலை நீண்ட காலமாக பழுதடைந்து காணப்படுகிறது. பலமுறை இந்த சாலையை சீரமைக்க இப்பொழுது மக்கள் வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு மற்றும் ரேஷன் கார்டு ஆதார் கார்டுகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.