சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கல்லாகுழி தெருவில் TN63 BK 1344 என்ற பதிவு எண்ணைக் கொண்ட காரை அதன் உரிமையாளர் தனது வீட்டின் அருகே நிறுத்திவைத்திருந்தார். பின்னர், அந்தக் கார் கடந்த ஒரு மாதமாக காணவில்லை என கூறப்படுகிறது.இது தொடர்பாக, காரை கண்டுபிடித்து தருமாறு மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு, திருப்பத்தூர் காவல் நிலையத்தில், காவல் உதவி சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வழக்குபதிவு செய்துள்ளனர்