தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், பாடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பாலக்கோடு திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் நடந்தது.பாடி, பூகானஅள்ளி, செக்கோடி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.