ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொல்லம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவரது மனைவி பாத்திமாபானு. இவர் கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இதனை அடுத்து தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி தமிழக முதலமைச்சர் அறிவித்த 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை குடும்பத்தினரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம், ஒட்டன்சத்திரம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் கே பாலு உடன் இருந்தனர்.