அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மதுபான பாரில் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டும், கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பாஸ்கர், பாரதி, சக்திவேல், கார்த்தி, முருகானந்தம் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.