முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணித்திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு 12 நாட்களும் சுவாமியும், அம்பாளும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறனர்.