வடமதுரை ஒன்றியம் புத்தூர் ஊராட்சி குருந்தம்பட்டியில் வேடசந்துார் வீரா சாமிநாதன் அறக்கட்டளை, திண்டுக்கல் கே.டி.மருத்ததுவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தின. இந்த முகாமில் ஏழை மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவ முகாமை அறக்கட்டளை நிறுவனர் வீரா சாமிநாதன் துவக்கி வைத்தார். டாக்டர் துரை தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாண்டி, வடமதுரை நகரச் செயலாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.