வேடசந்தூர் ஒன்றியம் குஜிலியம்பாறை தாலுகா கோவிலூர் அருகே உள்ள பண்ணைகுளம் பகுதியில் நீண்ட வருடங்களாக வீடு கட்டி பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த வீடுகளுக்கு வீட்டடி பட்டா தற்பொழுது வரை வழங்கவில்லை. இதனையடுத்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டடி பட்டா கேட்டு மனு அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய குழுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராகேஷ், மாரிமுத்து, குஜிலியம்பாறை ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.