அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சில நபர்கள், அவருக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளதாக கூறி நம்ப வைத்து செய்வினை எடுக்க பல பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி சிறுக, சிறுக 12 லட்சத்திற்கு மேல் பணத்தினை ஏமாற்றி உள்ளனர். இந்த குற்றத்திற்காக தர்மராஜ் என்கிற கிருஷ்ணனுக்கு 02 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.