அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் காவல் துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட எஸ்பி விஸ்வேஷ் பா சாஸ்திரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நீதிமன்றம் தொடர்பான காவல்துறை பணிகள், நிலுவையில் உள்ள வழக்குகள், சட்டவிரோத செயலுக்கு எதிரான நடவடிக்கைகள், மேலும் தனிப்பிரிவு குறிப்பாணைகள் குறித்து கேட்டறியப்பட்டது.