அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும், அரசியலில் மதிமுகவின் மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மதிமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாக தெரிவித்தார். மேலும் இணையவழி மூலமாக நேற்று கட்சியில் இணைந்ததாகவும், நாளை திருச்சியில் விஜயை சந்தித்து முறைப்படி இணைய உள்ளதாகவும் தெரிவித்தார்.