தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த மொட்டையன் கிராமத்தை சேர்ந்த முதியவர் கிருஷ்ணன் (72) இவருக்கும் இவரது தம்பி பச்சையப்பன் (72) என்பவருக்கும் நிலத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது, இந்நிலையில் கடந்த 15ம் தேதி நிலத்தில் இருந்த முதியவரிடம் அவரது தம்பிகளான பச்சையப்பன், பெருமாள் (60) பச்சையப்பனின் மகன் முருகன் (40) ஆகியோர் எப்படி நிலத்தை கிரயம் செய்யலாம் என கூறி தகராறில் ஈடுபட்டு முதியவரை எட்டி உதைத்து தாக்கி உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.