தஞ்சை ஆண்ட மாமன்னர் சரபோஜி பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை அரண்மனை தர்பார் மண்டபத்தில் உள்ள அவரது முழு உருவ பளிங்கு சிலைக்கு தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சை எம்பி ச. முரசொலி, மாவட்ட எஸ்பி ராஜாராம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராஜாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.