சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற அரசு பேருந்து சீர்காழி பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது சூரக்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு உப்பனாற்று வடிகால் வாய்க்கலில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்