வேடசந்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுகவின் சார்பில் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நல்லமனார் கோட்டை ஊராட்சி அருப்பம்பட்டியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேடசந்தூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனியம்மாள் சவுண்டமுத்து தலைமை வகித்தார். வேடசந்தூர் முன்னாள் எம்எல்ஏவும் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளருமான டாக்டர் பரமசிவம் மற்றும் வேடசந்தூர் முன்னாள் எம்எல்ஏவும் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளருமான தென்னம்பட்டி பழனிச்சாமி ஆகியோர் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.