இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு தின நிகழ்ச்சியை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 11ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள்/ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.