தூத்துக்குடி அருள்ராஜ் மருத்துவமனை அருகே பண்டுகரை சாலை பகுதியில் பக்கீல் ஓடை உள்ளது இந்த பக்கீல் ஓடை உள்ளே 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நைட்டி அணிந்தபடி தலைக்குப்புற உடல் கவிழ்ந்து இறந்த நிலையில் கிடப்பதாக மத்தியபாகம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மத்திய பாகம் காவல்துறை சார்பில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தீயணைப்புத் துறையினர் இறந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடலை வெளியே எடுத்தனர்.