மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், கூடக்கோவில் ஊராட்சியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கே.ஜே.பிரவீன் குமார் அவர்கள் ஆய்வுக் கூடம், சிகிச்சை பிரிவு, கால்நடை மருந்தகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் மருத்துவ சேவையின் கருத்துகள் குறித்து கேட்டறிந்தார்