முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகங்கை கொடிக்காடு கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் சிவகங்கை தொண்டிசாலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் உள்ள மைதானத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 18 காளைகளும் அதேபோல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 162 வீரர்களும் பங்கேற்றனர்.