வேடசந்தூர் அருகே உள்ள கிழக்கு மாரம்பாடியில் திண்டுக்கல் மறைமாவட்டம் புனித பெரிய அந்தோணியார் மறை வட்டம் புனித செபஸ்தியார் ஆலய 48 ஆம் ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கடந்த 1977 ஆம் ஆண்டு வெள்ளம் ஊரைச் சூழ்ந்து அளித்த போது செபஸ்தியார் ஆலயத்தின் முற்றங்களில் மக்கள் தஞ்சம் புகுந்து உயிர் பிழைத்தனர். தங்களைக் காத்த செபஸ்தியாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி செபஸ்தியாரை வணங்கி மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர். ட்ரம் செட் முழங்க ஆட்டம் ஆடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.