தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு, 13 முதல் 18 வயதிற்குட்பட்ட வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு பாராட்டுப் பத்திரமும் ரூ.1 இலட்சம் காசோலையும் வழங்கப்பட உள்ளது. தகுதியுடையோர் வரும் நவம்பர் 29-ஆம் தேதிக்குள் https://awards.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, தேவையான ஆவணங்களுடன் சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடிவெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.