சிவகங்கை ராஜாஜி தெருவை சேர்ந்த ரமேஷ் (53) என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். 2020 ஆம் ஆண்டில் இருந்து, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.