தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில், உலக சுற்றுலா தின விழா- 2025ஐ முன்னிட்டு, அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலா தொழில் முனைவோர்களில் வெற்றியாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாளுபவர்களுக்கு சுற்றுலா விருதுகள் கடந்த 2022 ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.