திருநெல்வேலியில் 28 சட்டமன்ற தொகுதி பாஜக முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்தார். திருநெல்வேலியில் கூட்டத்தை முடித்துவிட்டு கார் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார் அங்கு அவருடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வந்திருந்தனர்.