அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி, தனது தம்பி பாலசுப்பிரமணியனுக்கு தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக சென்று விட்டு மீண்டும் காரில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் காரை ஓட்டி வந்த முரளி மற்றும் காரில் பயணம் செய்த விஜயலட்சுமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.