அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க கட்சித் தலைமைக்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்த நிலையில், பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.