தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் வான்படை தளபதி அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பங்கு தந்தை வின்சென்ட் முன்னிலையில் மேதகு ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் கொடி அர்சிக்கப்பட்டு கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.